​(ஆடுவோமே…..நாம் ஆடுவோமே!…)

நானும், நீயும் ஆடுவோம்; இந்த−

நானிலம் மயங்க ஆடுவோம்;

வானும், மதியும் நாமென்று−

வார்த்தை சொல்லாமலே, ஆடுவோம்!
அகிலம் இன்புற ஆடுவோம்;

அனைத்து உயிர்க்காகவும், ஆடுவோம்;

சகலமும் நம்மை சேர்ந்ததென்று−

சொல்லிச் சொல்லியே, ஆடுவோம்!
இரவு, பகலாய் ஆடுவோம்; இனி−

இடர் இல்லை எங்குமென, ஆடுவோம்;

உறவின் வாசல் திறந்ததென்று−

உவகையுடன் சொல்லி, ஆடுவோம்!
சேய்களைத் தாங்கிடும் தாயாக−

சகத்தில், நாம் உண்டென்று ஆடுவோம்;

மாய்ந்திடும் மக்களின் துயரென்று−

மங்களம் பெருகவே, ஆடுவோம்!
காண்பவர் நெஞ்சு மகிழவே, நம்

காதல் புலப்பட, ஆடுவோம்;

ஊனும், உயிரும் உருகிடவே−இந்த

உலகத்தோர்க்கென, ஆடுவோம்!
பவத்தின் வல்வினை நசிந்திடவே−நாம்

பரிந்தே, தினமும் ஆடுவோம்;

திவத்தின் சுவையை இவர் உணர−நாம்

தவமாய், இனியும் ஆடுவோம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s