​(உனக்கென ஆக்கிடு…)

குழலிசை தொடர்ந்திட, குமரியும் மயங்கினேன்;

கோவிந்தன் பெயர் சொல்லி, என் உளம் உருகினேன்;

நிழலென நீ வர, நெஞ்சமே கிறங்கினேன்;

நெகிழ்ந்து, என் இளமையை, தூதென அனுப்பினேன்!
இரவின் நீள் போதிலே, இமை திறந்து ஏங்கினேன்;

இருளில் உன் உருவமே, மனதிலே எழுதினேன்;

உறவில் நான் இணையவே, உயிரை, உனதாக்கினேன்;

உன்மத்தம் ஆனதால், உலகியல் நீங்கினேன்!  
காணும் இடம் எங்கிலும், கண்ணா, உனைத் தேடினேன்;

காதலின் கனலிலே, கன்னி நான் வாடினேன்; யானும், என்னை மீட்கவே, உன்னிடம் ஏகினேன்;

யாதவன் மடியிலே, ஒரு சுகம் வேண்டினேன்!.
என் நிலை அறிந்து நீ, உன்னையே தந்திடு;

என்னவா! ஏழையின், தாபமும் தீர்த்திடு;

உன்னவள் என்றெனை, ஊரெல்லாம் சொல்லிடு;

என்னுடை ஆவியும், உன் கழல் ஏற்றிடு!
நம்முள்ளே இடைவெளி, இல்லை என்றாக்கிடு;

நானுமே நீயாக, நாதன், வழி காட்டிடு;

இன்னும் ஏன் தாமதம்?, இசைந்து நீ வந்திடு;

இன்னலே போக்கி நீ, என்னை உனக்காக்கிடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s