​(கொஞ்சம் எனக்காய், ஒரு தவம்….)

வெண்ணையை ஒரு கரம் ஏந்திக் கொண்டு,

என்னை ஏனோ தேடுகின்றாய்; 

பெண் மீது மறு கரம் தாங்கிடவா−

பெருமான், நீயும் துடிக்கின்றாய்?
ஓடி, உடன் நான் வந்திடவோ−

ஒரு காலில் தவமே  செய்கின்றாய்?

ஒருக்கால், யான் வரத் தாமதித்தால்,

பொறுக்காது, உனக்கே போய் விடுமோ?
எத்தனை ஆண்டுகள், யுகங்களாக,

பத்தர்கள் உன்னை வேண்டுகிறார்!

அத்தனை பேரையும் அலைக்கழித்து− 

பித்தனாய் அன்றோ, நீ ஆக்குகின்றாய்?
கூப்பிட்டவுடன், யான் வருவதற்கு−

கோவிந்தா, நீ, கற்றுத் தரவில்லையே;

கதறி அழைத்த பின், கனிந்திடவே−

கண்ணா நீ சொன்னாய்; அது மறக்கலையே!
காத்திருப்பதென்றால் என்னவென்று, நீயும்−

கற்றுக் கொள்ளடா, என் மணிவண்ணா!

காலமும் கொஞ்சம் போகட்டும்;நீ−

கன்னியும் வந்திட,  ஒரு தவம் செய்யடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s