​(நீ வருவாயென…..)

என்று வருவாய், நீ−

என்று வருவாய்?

எங்கெங்கோ அலைகின்றாய்; நீ−

எனைத் தேடி, என்று வருவாய்?
இன்றோ, நாளையோ,

இனியும் எத்தனைக் காலமோ?

நன்றோ, இத்தொலைவு−

நம்மிடையே, எதற்கோ?
உனக்காக காத்திருக்கேன்; நீ−

உணரவில்லையே;

எனக்கோ, நீ இன்றி−

ஏதும் சுகமில்லையே!
உண்ணவும் மனமில்லை; 

உறக்கமோ, வரவில்லை;

எண்ணமெல்லாம், உன்னையே−

பின்னியே பிணைகிறதே!
என்னை நீ மறந்ததனால்−

ஏதேதோ சங்கடங்கள்;

உன்னைத் தந்து விட்டால்−

உனக்கேது, இனி சஞ்சலங்கள்?
தாயாக இருப்பதனால்−உன்

துயரம், தாங்கலையே;

நீயாக வருவதற்கோ, என்−

நினைவு, உனக்கில்லையே!
பித்தன் நான் ஆனேன்; உன்−

பிரிவில் தனியானேன்;

எத்தனை நாள் இப்படியோ?

என்றோ தான், நல் விடிவோ?
உயிரெல்லாம், என்னதென்றே−

உள்ளபடியே, நினைத்திருந்தேன்;

உடையவனை வந்தடைய−

ஒருவரின்றி, மனம் நொந்தேன்!
காத்திருக்கேன் கண்ணனுமே−

கடிதோடி, நீ  வந்து விடு;

கரம் தந்து, நான் அணைப்பேன்;

கவலையை என்னிடம் தந்து விடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s