​(வருவாயா, உன்னைத் தருவாயா?…)

என் கன்னத்தை, உன் பிஞ்சுக் கை ஏந்தி−நீ,

எனக்கொரு முத்தம் தருவாயா?

என் வயிற்றில், உன் சிறு கால் பதித்து−நீ,

எம்பி, என் தோள் சாய்வாயா?
என் மார்பில், அழகிய முகம் பதித்து−நீ

உன் விசும்பலில், என் மனம் கரைப்பாயா?

என் கரத்தால், உந்தன் தலை கோத−நீ,

எனக்கே வாய்ப்பும் கொடுப்பாயா?
என் செவியின் அணியை, நீ திருக−

நான் செல்லமாய், கோபிக்க விடுவாயா?

என் அழகிய கேசம் நீ கலைத்து, 

உன் கோபமும்  தீர்த்துக் கொள்வாயா?
எந்தன் விழியை நீ மறைத்து−

உன்னை, யாரெனக் கேட்பாயா?

எந்தன் பின்னே நீ நின்று−

உன் இரு கரத்தால் எனை அணைப்பாயா?
என் முகம் ஒளிர்ந்து மலர்ந்திடவே−

உன் மழலை மொழியால், மயக்குவையா?

என் அகம் குழைந்து, குளிர்ந்திடவே−

உன்னை இந்த, அன்னையின் செல்லம் என்பாயா?
என் அதரம் விரும்பிச் சுவைத்திடவே−

உன் வாயின் அமுதம் அளிப்பாயா?

என் உதரம் பாக்கியம் செய்திடவே−நீ

என்னில் ஒரு முறை ஜனிப்பாயா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s