(கைது செய்யவா, கண்ணா?…)

ஏனிந்த அவசரமே,  என் நந்தலாலா?

என்னை விட்டு நீங்காதே, என் வேணு லோலா!

ஊனிதுவும் உருகுதடா, உன்னை நினைந்தாலே−

உயிர், ஆவி, உனதாச்சே, என் சோதை பாலா!
நேற்று மாலை சொன்னாயே, சேதி ஒன்று நீயும்;

நெஞ்சமதும் குளிர்ந்ததடா, உனக்கானேன் நானும்;

காற்றும் புகுந்து பிரித்திடுமோ, நம்மையே எந்நாளும்?

கனவிலும் அது நிகழாதே, என்− கைச்சிறையில் நீயும்!
கரத்தினின்று, தப்பி விட்டால்,

கண் இணையால் கட்டி வைப்பேன்;

கண் இணையை  வென்றாலோ, என் மனக்குகையில் ஒளித்து வைப்பேன்!

மனக்குகையின் வாசலுக்கு,

மோகமெனும் தாளிடுவேன்;

மன்னவனை மயக்கி அங்கே−

முகவரியை மறைத்திடுவேன்!
எங்கும் செல்ல இயலாமல், 

என்னுள்ளே இருப்பாய் நீ; 

பொங்கி வரும் என் காதலிலே,

பசியும் ஆறி இருப்பாய் நீ;

பெண் நினைத்தால், இயலுமெல்லாம், 

பரந்தாமா, உணர்வாயோ?

பேதையின் அழைப்பேற்று, 

பொருந்தியே, நீ, உறைவாயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s