​(அப்படிப் பார்க்காதே….)

அப்படிப் பார்க்காதே, ஹே அரவிந்தா−

அடியேனும், உன் சேயே, ஓ கோவிந்தா!

அடுத்தடுத்து பிழையே, யான் செய்தாலும்−

ஆட்கொள்ள, யார் வருவார், என் வைகுந்தா?
தெரிந்தே, நான் தவறெல்லாம் செய்கின்றேனே;

தன் சுகமே, பெரிதாக நினைக்கின்றேனே;

அறிந்தாலும், அவை யாவும் தள்ளி வைத்து, 

அச்சுதனே, எனைக் காக்க, அகம் குளிர்வாயே!
நற்குணங்கள், நாயேனுக்கு, ஏதுமில்லை;

நல்லோரின் சேர்க்கையிலும், ஆசையில்லை;

பற்றவும் உனை மறந்தேன், பாவியேனே−

பாலிக்க வருவாயோ, பரிந்தே நீயே?
நேற்று வரை, உன் நினைவை ஒழித்திருந்தேனே;

இன்று, அந்த அச்சத்தில், ஒளிகின்றேனே;

நாளையேனும், உனைத் தேடி, நான் வரக்கூடும்;

நம்பிக்கையொடு காத்திருப்பாய், எனக்காய் நீயும்!
கன்றெந்தன் வழுவெல்லாம், கணக்கிட வேண்டாம்;

கண்ணா, உன் கருணைக்குத் தடையிட வேண்டாம்;

என்னாலே, ஏதாகும்? உன் மனம் அறியும்;

ஏழை எனை மீட்க, இங்கு யாரால் ஆகும்?
ஆதலால், அப்படிப் பார்க்காதே, என் அரவிந்தா;

அடைக்கலமே நீ தானே, ஹே கோவிந்தா;

அபலைக்கு துணையாக நீ வருவாயே!

அழும் விழிகள் துடைத்திடவே, கரம் தருவாயே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s