​(இனி, விதியும் மாறுமே, வைகுந்தா…)

அகிலம் போற்றும் அருட்குழவி,

அடங்கி, என் மடி சேர்ந்ததென்ன?

சகலமும் ஆன பரம்பொருளே! நீ−

சேயாய், என் முகம் பார்ப்பதென்ன?
முக்கோடி முனிவரும் தவமிருக்கும்−

முகுந்தன் தரிசனம் பெறுவதற்கு,

முக்காலம்,  தருமம் செய்தேனா? இல்லை,

முறையாய், தவமே புரிந்தேனா?
மூவடி அளந்த திருவடியால், என்−

மார்பகம் நீயும் தீண்டுகிறாய்;

சேவடி தந்த பெருஞ்சுகத்தில்−நான்

செய்வதறியாது திகைத்தேனே!
இரு கரத்தால், உன் உருவேந்தி−அந்த

இதத்தில், நான், அக மகிழ்ந்தேனே;

சிறு இடை துகிலை, நீ நனைக்க, நான்−

சோதையாய், காரியம் செய்தேனே!
நாவும் வழித்து, நீராட்டி, என்−

நாயகன், உன் சுகம் வளர்த்தேனே!

நானாவிதமாய் பெயரிட்டு−என்

நலிவும் கெட, உனை அழைத்தேனே!
சந்திரன் காட்டி, சோறூட்டி, உன்

சிறுவாய், சேலையில் துடைத்தேனே;

இந்திரர் ஆதியாய்,  வணங்கி நிற்க, நான்−

என் மகனாய், உனை,  அடைந்தேனே!
வெண்ணை திருடி, நீ விழுங்க, நான்−

ஊரார் வாயில், விழுந்தேனே;

என்னைத் திருடி, நீ உளம் உருக்க−நான்

இனியும், பிறவாது, எழுந்தேனே!
யானா செய்தேன் புண்ணியமே? என்−

யாதவா, யாவும், நீ தந்த பெரும் நிதியே!

வானாளும் வைகுந்தன், என் மடி கிடக்க−இனி

தானாக மாறாதோ, என் தலை விதியே?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s