​(உனக்காகவே, நான் வாழ்கிறேன்..)

எல்லாமும் மறந்து, உன் தோள் நான் சாய்கிறேன்;

என் சோகம் சொல்வதற்கு,  உன் செவியும் கேட்கிறேன்;

எனக்காகும் ஒரு மனதை, உன்னுள்ளே தேடுகிறேன்;

எனைத் தாங்கும் கரங்களையும், உன்னிடம் நான் யாசிக்கிறேன்!
உள்ளத்தின் சுவரிடையே, நான் உள்ளன்பை வேண்டுகிறேன்;

உயர் வேத மொழியாக, உளம் திறக்கக் கோருகிறேன்;

உறவாக, உன்னை நீ, தந்திடவே விரும்புகிறேன்;

உடைமையாக்கி, உன்னை நான் ஆளவுமே விழைகிறேன்!
என் மனதின் எண்ணங்களை, நீ படித்திடவே ஏங்குகிறேன்;

என் இதயம் மகிழ்ந்திடவே, உன் செயல்களை எதிர்பார்க்கிறேன்;

என் உயிரில் கலந்திடவே, உனை கூவிக்கூவி அழைக்கிறேன்;

எனை நீயும் பிரிந்து சென்றால், உனை எண்ணியே நான் அழுகிறேன்!
என் துணையாய் உனை வரித்து, உனக்காகக் காக்கிறேன்;

என் விழி மேலே விழி வைத்து, உன் வாசல் பார்க்கிறேன்;

என் உயிரில், உன்னுயிரும், இயைந்திடவும் இசைகிறேன்;

என்னுள்ளே நீ இணைந்திடும், அந்நாளை எண்ணி வாழ்கிறேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s