(யாரேனும் ஆவேனே….)

(யசோதையாய் ஆவேனா?…..)
சோதை தாயாய் ஆக்கிடு என்னை;

சேலை மூடி, பாலும் தருவேன்;

தாதை நந்தன் பேரைச் சொல்லி−

தங்கத் தொட்டில், போட்டுத் தருவேன்!
நாக்கு வழித்து, நீராட்டி,

மூக்கழுக்கு எல்லாம் எடுத்திடுவேன்;

காக்கும் கடவுள் நீ என்றாலும்−இந்த

தாய்க்கு சேயாய், உனைத் தாங்கிடுவேன்!
நாளெல்லாம் கதைகள் சொல்லி−

நானும்,  சோறு ஊட்டிடுவேன்;

மாலை வேளை நேரம் வர,

முற்றத்து நிலவும் காட்டிடுவேன்!
கடையும் முன்னே தயிரெடுத்து−

கலம் நிறைத்து, கையில் தருவேன்;

இடையை வந்து நீ பிடிக்க−

எடுத்த வெண்ணை, உருட்டித் தருவேன்!
ஊரார் உன்னைக் குத்தம் சொல்ல−

தீராப்பகையும் கொண்டிடுவேன்;

“பார், இவன் பச்சைப் பிள்ளை” என்று

பரிந்துனக்கு, அவரை விரட்டிடுவேன்!
இரவெல்லாம் கண் முழித்து, 

இதமாய் பணிவிடை செய்திடுவேன்;

விராமமே நீயும் எடுக்க,

வேர்க்காது, நானும் விசிறிடுவேன்!
நந்தன் செவியில் வீழா வண்ணம், 

உந்தன் பிழைகள் மறைத்திடுவேன்;

எந்தன் பொன்னே, மணியே என்று−

ஏழைத் தாயும், உனை அணைத்திடுவேன்!
எத்தனைப் பிரியம் உன் மேல் என்று−

என் கண்ணே, உனக்குக் காட்டிடுவேன்;

அத்தனையும் நீ, திருப்பித் தர, உன்னை−

அகத்தில் வைத்து, அன்னை பூட்டிடுவேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s