​(என்னிடத்தில், உன்னைக் கொடுப்பாய்!….)

என்னை அணைத்த போதினிலே−

என் அன்பின் ஆழம் அறிந்தாயா?

விண்ணைத் தாண்டும் அளவினிலே−

உன்னை நேசிப்பதும் உணர்ந்தாயா?
விண்மீன் கோடியே இருந்தாலும்,

வெண்மதியால், வான் அழகுறுமே;

என்னைச் சூழ்ந்து பலர் இருந்தும், 

பெண்ணே, நீ தான், என் விழியே!
எனக்காய் தவமே பலரிருக்க−

என் தவமாய், உனை நினைத்தேனே;

உனக்கது தெரிந்தே இருந்தாலும்,

உள் மனதில், ஐயம் ஏனடியே?
பாலாய் உள்ளம் எனதடியே−

பாவையும் மறந்தது, ஏனடியே?

நாளாய், திங்களாய், யுகம் யுகமாய்−

நாரணண் கிடப்பதும், உன் காலடியே!
ஏனோ பெண்ணே, உன் மனதில்−

ஏழை என் மேல், குறை விலகலையே;

எனக்கென இங்கே யாரடியே, 

என் உயிர் நீ தானே,  பைங்கிளியே!
போகட்டும் கலக்கமும், மயக்கமுமே−

பரந்தாமன், என்னில் நீ கலந்துவிடு!

ஆகட்டும் இங்கே, ஒரு சங்கமமுமே−

ஆருயிர் ஒன்றியே நீ கரைந்துவிடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s