​(காத்திருடா, கமலக் கண்ணா…)

வேலை உனக்கு ஏதுமில்லை;

வாசல் வந்து பேச வந்தாய்;

காலை முதல் அந்தி வரை−

கையொழிந்து, நான் அமரவில்லை!
கடமை என்னை அழைக்கும் போது, 

கண்ணனுடன் பேச்சு என்ன?

உடன் வந்து உதவி செய்யேன்,

உள்ளபடியே, நல்லதாகும்!
பக்கம் சூழ்ந்து பக்தர் குழாம்

பலதும் உனக்கு செய்வதாலே, 

இக்கணம் என் இக்கட்டெல்லாம்−

எப்படி தான், புரியும் சொல்லு!
பரமபதத்து பிரபு நீ ஆனாலும், 

பதைபதைத்து, நான் வர மாட்டேன்;

கரத்து வேலை, முடித்து வரேன்−

காத்திரு நீ, என் கதவருகே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s