​(யாரேனும் ஆவேனே….)

(தோழனாய், ஆவேனா?….)
கண்ணா, கருப்பா, வாடா என்றால்,

கன்றுக்குட்டியாய், பின் வர வேணும்;

என்னால் இயலாத காரியம் யாவும்−

எண்ணி முடிக்கும் முன், நீ செய்திட வேணும்!
உன் தோழன் நானும், என்பதனாலே−

உதவிக்கு அழைத்ததும், நீ வர வேணும்;

உள்ளன்புடனே என்னுடன் நீயும்−

உன் கட்டுச் சோற்றை, பங்கிட வேணும்!
வெண்ணைத் திருடித் தின்னும் போது−

வாயில் எனக்கும், ஊட்டிட வேணும்;

என்னை எங்கும் மாட்டி விடாமல்,

உன் மேல் பழியை, ஏற்றிட வேணும்!
மரமும் ஏறி, கனியைச் சுவைக்க−

மாதவா நீயே, வழி சொல்ல வேணும்;

கரமும், கரமும் கோர்த்துக் கொண்டு−

காலாற நாமும், நடந்திட வேணும்!
சுணை நீரில் குதித்து, நீந்தி மகிழ்ந்து−

சோர்வை களைய, துணை வர வேணும்;

எனை யாரும், என்றும், ஏச நேர்ந்தால்−

எம்பிரான் நீயே, காத்திட வேணும்!
விழியில் ஒரு துளி நீர் வந்தாலும்−

வைகுந்தா, உன் கரம் துடைத்திட வேணும்;

வழித்துணையாக, என் வாழ்வில் என்றும்−

வேங்குழலானே, நீ வர வேணும்!
நேற்றைய ஞாபகம், நெஞ்சில் நிறைந்து−

“நண்பா” என்றெனை, நீ கொண்டாட வேணும்;

நாளைய பொழுதும், மறந்து விடாமல்−

நீ என்னை, இயல்பாய், பார்த்திட வேணும்!
உன் வாசல் தேடி, நான் வர நேர்ந்தால்−

ஓடி வந்தெனை, எதிர் கொள்ள வேணும்;

என் தாபம் யாவும், தெரிந்து வைத்து−

உன் நேசத்தாலே, தீர்த்திட வேணும்!
உன்னையும், என்னையும் ஒன்றாய் கண்டு−

ஊரார் அசூயை, படவும் வேணும்;

உன்னுடனான உரிமை கண்டு−

உலகமே, என் நிலை, விழையவும் வேணும்!
நட்பின் இலக்கணம், நாமே என்று−

நல்லோர் நம்மை, போற்றிட வேணும்;

நெஞ்சம் நிமிர்த்தி, நந்தன் மகனை−

எந்தன் தோழனாய், நான் முழங்கவும் வேணும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s