​(யாரேனும் ஆவேனே…)

(ஒரு கோபிகையாய் ஆவேனா?…)
கண் மூடி நீ இசைக்க,

கரைந்து அதில், நான் ஆடணுமே;

பெண் என்னை சேர்த்தணைக்க−

புளகாங்கிதம் அடையணுமே!
காதலென்னும் கணை ஏவி−

கன்னி எனை, கை கொள்ளணுமே;

காரிருளில் தூது விட்டு, நீ−

கலக்க, வழி சொல்லணுமே!
யமுனையிலே நீராட, 

யாதவன் எனை அழைக்கணுமே;

யதுநந்தன் உன், விரல் பட்டு,

என் காதல், உயிர் பிழைக்கணுமே!
பின்னலிலே மலர் சூடி−

பேதைக்கு அருள் செய்யணுமே;

கன்னமதில் காயம் செய்து, நீ−

காதல் மழை பெய்யணுமே!
சேலையிலே நீர் இரைத்து−

சீண்டி கொஞ்சம் பாக்கணுமே;

வேளை பொழுது இல்லாமல், என்−

வாசல் வந்து நிக்கணுமே!
கரத்தாலே கனி பறித்து, நீ−

கொஞ்சம் கடித்து, கொடுக்கணுமே;

கரம் பிடித்து எனை ஏற்க−

யாரும் வாராது, நீ தடுக்கணுமே!
மார்வம் சாய்ந்து மகிழ நானும்−

மனமிரங்கி, நீ இசையணுமே;

மங்கை என்னை, உன் வசமாக்கி−

மணமாலையும், சூடணுமே!
யார் பின்னும் போகாது−

எனக்கு மட்டும், நீ ஆகணுமே;

கார்குழலில் நான் கட்டி வைக்க, நீ−

காலமெல்லாம், அடிமை செய்யணுமே!
என் அருகே, நீ அமர்ந்து−

இந்த வையமெல்லாம், ஆளணுமே;

என் மொழியை ஏற்று நீயும்−

எல்லோர்க்கும் அருளணுமே!
நீ என்றும், என்னுள்ளே−

நிலைத்து, இன்பம் கூட்டணுமே;

நான் உந்தன் உயிர் கலந்து−

“நான்” கரைந்து காட்டணுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s