​(யாரேனும் ஆவேனே…)

(பாஞ்சாலியாய் ஆவேனா?….)
பஞ்சவர் பத்தினி நான் ஆனால்−

பக்கம் நீ வந்து நிற்பாயா?

நெஞ்சின் சோகங்கள் சொல்கையிலே−

நீ அதை, அன்போடு கேட்பாயா?
ஐவரை கணவராய் வரித்திருந்தாலும்−

அபயம் தர, உன்னைக் கூப்பிடவா?

கைகள் இரண்டையும் உயரே தூக்கி, 

“காப்பாய், கோவிந்தா!” என கதறிடவா?
சேலைத் தலைப்பை, கொஞ்சம் கிழித்து−உன்

சிறு காயத்துக்கு, நான் மருந்திடவா?

சேலையை, மலை போல், நீ வாரி வழங்க−உனை

சேவித்து, நன்றியில், நெகிழ்ந்திடவா?
ஒற்றைப் பருக்கையை மட்டுமே வைத்து−

உன் பெயர் சொல்லி, நான் விருந்திடவா?

பெற்றேன் உந்தன் அன்பை எல்லாம், என−

பூரித்து, மனமே மகிழ்ந்திடவா?
கோபத்தில் நான் செய்த சபதம் எல்லாம்−

கூடவே இருந்து நீ, நிறைவேற்றுவையா?

தாபத்தில் உன்னை வினவுகின்றேன்−இந்த

தமியேனை, நீ என்றும் தாங்குவையா?
உடன் பிறப்பாக, உன்னை எண்ணி−

உரிமையாய், பெயர் சொல்லி விளிக்கட்டுமா?

உயிரை வருத்தும் வாதைகள் எல்லாம்−

உன் மடியில், நானும் கரைக்கட்டுமா?
அழுகின்ற கண்களின் ஈரம் எல்லாம்−

அமுதனே, உன் கரம் துடைத்திடுமா?

பழுதாய் போன எந்தன் வாழ்வை−

பரமனே, உன் அருள், நேர் செய்யுமா?
பக்தியைக் காட்டும் அன்பரிடையே−

பாசம் எனதும், பேர் சொல்லுமா?

முக்தியைத் தருகின்ற முகுந்தனின் உறவால்−

மங்கை என் வாழ்வும், இனி வெல்லுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s