​(யாரேனும் ஆவேனே….)

(தேவகியாய் ஆவேனா?…)
பத்து மாதம் சுமந்திடணும்,

பத்தியமே இருந்திடணும்;

பக்குவமாய் பார்த்து நடந்து−

பரந்தாமன் உனை, உள் வளர்த்திடணும்!
உள் வந்து நீ அமர,  அந்த−

உவகையை நான் உணர்ந்திடணும்;

தள்ளாமை மிகுந்து வர,

தாய் நானும் துவண்டிடணும்!
மசக்கை பாடாய் படுத்திடணும்;

மெல்ல, உன் எடை கூடிடணும்;

இசைந்து என்னுள் நீ பொருந்திட,

இன்பம் எல்லாம் அங்கு, பெருகிடணும்!
பிஞ்சு காலால் நீயும் உதைக்க,

நெஞ்சார நான் களித்திடணும்;

அஞ்சாம் மாச அனுபவங்கள்−

அலுக்காமல் நானும், அடைந்திடணும்!
ஒருக்களித்து படுத்து நானும்−உன்

உருவம், தாங்கி இருந்திடணும்;

வரும் நாளை எண்ணி, எண்ணி,

விழிகள் கனவில் மிதந்திடணும்!
மூணு கவளம் சாப்பிடவே, 

மூச்சு முட்டும் எட்டாம் மாசம், 

மகிழ்ந்து நானும் கடந்திடணும்−

மகன் உன்னைக் காத்திடணும்!
உயிர் வலியை உணர்ந்து நானும், 

உன்னை வெளிக் கொணர்ந்திடணும்;

உயிராய் எங்கும் உறையும் உன்னை,

உவந்து பெற்று, உய்ந்திடணும்!
பத்து மாசம் சுமந்தவள் என்று,

பாரெல்லாம் எனைச் சொல்லிடணும்;

மத்த ஏதும், எனக்கு வேணாம்−

மடியில்  வந்து, நீ நிறைந்திடணும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s