​(ஏன், ஏன், ஏன்?….)

என்னுள் ஒளிந்து எனை இயக்குகிறாய்; நான்−

ஏதங்கள் புரிவதை நீ விரும்புகிறாய்;

மண்ணுள் மீண்டும் நான் உழல்வதையே, 

என்றும்− 

மனமிரங்காமலே, எதிர் நோக்குகிறாய்!
உனக்கொருபொம்மையாய் நான் கிடைக்க, 

எனை−

உலகமெனும் மேடையில் ஆடவிட்டாய்;

எனக்கொரு மென் மனம் இருக்குமென்று, நீ−

ஏனோ மறந்து, அனுப்பி விட்டாய்!
நாளும், பொழுதும் வேதனையில், எனை−

நடக்க வைத்துப் பார்க்கின்றாய்;

காலச்சுழலில் மூழ்க விட்டு, பெரும்− 

கலக்கமும், மயக்கமும் தருகின்றாய்!
தாளாத் துயரங்களைத் தந்து, சற்று−

தொலைவில் நின்று, நீ சிரிக்கின்றாய்;

மீளாப் பயணம் செய்ய வைத்து, ஒரு−

மோகனப் புன்னகை புரிகின்றாய்!
இருளில் வழியைத் தேடி நிற்கும்−

என்னை, எங்கே திரும்பி நீ பார்க்கின்றாய்?

மருண்ட மானாய் தவிக்கும் என்னை, ஏன்−

மனமிரங்காமல், நீ வாட்டுகின்றாய்?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s