​(யாரேனும் ஆவேனே….)

(குந்தியாய் ஆவேனா?…..)
அத்தை என் தவறுகள், அனேகம் ஆனாலும், 

அத்தனையும் நீ சகிப்பாயா?

“அச்சுதா, அனந்தா” என அன்பாய் அழைத்தால்−

அரைக்கண் மூடி, அதில் சுகிப்பாயா?
தன்னலம் கொண்டு, தவறுகள் செய்தால்− தயையுடன், அதை நீ பொறுப்பாயா?

தவற்றுக்குத் தண்டனை உண்டே என்று−

தமியேன் தவித்திட, எனை வெறுப்பாயா?
கற்ற வித்தையை, கை முதலாக்கி−

கன்னித் தாயானால், நீ விடுவாயா?

சுற்றமும், சொந்தமும் நீயே ஆகி−

சொல் கொண்டு என்னை சுடுவாயா?
பெற்றவளாய், நான் பிழையே புரினும்−

மற்றவர் முன், அதை மறைப்பாயா?

உற்றவனாய், என் உடனுமிருந்து−

உயிர் வாதை எல்லாம், நீ கரைப்பாயா?
தொடரும் வல்வினை, தொடர்ந்து வந்தாலும்−

தயையே மேவிடக் காப்பாயா?

படரும் பாவங்கள், யாவும் பொடிபட−

பார்வையிலே, எல்லாம் மாய்ப்பாயா?
உன்னை நானும் அழைக்கும் போது−

ஓடி வந்தே, அருள் புரிவாயா?

என்னை நானே வெறுக்கும் போது−

என் ஐயனே, எனக்கு நீ பரிவாயா?
துன்பங்கள் என்னை சூழ்ந்திடும் போது−

என் மனம் உன்னை நினைத்திடுமே;

கண் இமையாக, காக்க நீ வந்தால்−

கொடு வெந்நரகமும், இனித்திடுமே!
எதுவும் உன்னால் கிடைத்திடும் என்றால்−

ஏழை எனக்கதில், முழு சம்மதமே;

அதுவும் உந்தன் அருளே என்று, என்−

ஆவியும், அமைந்து, சுகம் பெறுமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s