​(பரமனே ஆயினும்…..)

தென்றலைத் தூது விட்டு,

தளிர் கொடியாள் சேதி சொன்னாள்;

அன்றலர்ந்த மலர் முகத்தான், 

அதற்கு விடை தரவுமில்லை;
கருத்த அந்த கண்ணனுக்கு,

கருமேகத்தால், காதல் சொன்னாள்;

வருத்தம் ஏதும் அறியாது, அவன்−

வாளாதே  இருந்து விட்டான்!
மயிலிறகு மன்னனுக்கு,

மங்கை மனம் எடுத்தியம்ப, 

குயிலை அவள் அனுப்பி வைத்தாள்;

குறிப்பேதும் வரவில்லை!

 

கரு வண்டு, மலர் நாடும்−

காட்சியிலே, சாடை சொன்னாள்;

பெருமான் அவன் திருஉள்ளம்−

பேதை பால், இரங்கவில்லை!
புள் ஏறும் பரம் புருடன்,

பாவை முகம் நோக்குதற்கு,

நள்ளிரவு நிலவை விட்டாள்;

நாயகனோ, இசையவில்லை!
ஆவினம் அவன் ஆருயிராம்;

அதன் கழுத்தில், ஓலை இட்டாள்;

அரவிந்தன் பார்வையிலே−

அது ஏதும் விழவில்லை!

 

ஓடும் யமுனை ஆற்று நீரில், 

உருகும் இதயம், சேர்த்து விட்டாள்;

நாடும் அந்த நாயகியை−

நாதன் ஏனோ, உணரவில்லை!
என் நினைத்தான், இவள் திறத்து?−

எவருள்ளார் இவளுக்கென்றோ?

பெண் பாவம் புரிந்து விட்டால்,

பரமன் ஆயினும், விதி வசமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s