​(கார்முகிலே, கனிவாயோ?…..)

கருவிலே “திரு” உடையேன் இல்லை;

கருப்பையினின்று, வீழ்ந்த போதில்−

உன் நினைவோ சிறிதுமில்லை;

உத்தமன் மேல் காதலுமில்லை;
வாழ்வெலாம் வீணன், வீணாய்−

போக்கியே, புறம் திரிந்தேனே;

தாழ்ச்சியும் தெரிந்து விலக−

தருணமோ,  வாய்க்கவுமில்லை;
ஏதங்கள் ஏராளமாய் நாளும்;

எம்பிரானே, ஈதென்ன மாயம்?

நாதனை நயந்திடும் மனது,

நாயேனுக்கு ஏன் அமையவுமில்லை?
அப்போதைக்கு, சொல்லி வைக்க−

இப்−பொழுதும், என் வசம் இல்லை;

முப்போதும், மறந்தொழிந்தேனே−

எப்பொழுதில், உனையே நினைப்பேன்?
காலம் இது கரைந்த வண்ணம்;

காயம் இது  மறைந்த வண்ணம்;

மாயம் அது, உந்தன் வண்ணம்−

மாதவா, எது எனக்கு, என்றும் திண்ணம்?
ஒரு பொழுது, மனமெனும் மேடை−

உவந்து நீ அமர்வாயானால், 

இரு வினைகள் தாமே விலகும்; என்−

உறு கலியும், ஒடுங்கி ஓடும்!
சேவித்து, யான் கேட்பதெல்லாம்−

சேர்ந்ததோ, உந்தன் செவியில்?

பாவி என்னை பாலித்திடவே,

பரமனே, பரிந்து வா, விரைவில்!
பழவினை வேரறுத்து−

படைத்தவா, கடமை செய்வாய்;

கழலிணை சரண் புகுந்தேன்;

கலி தீர்த்து, கனிந்தே மீட்பாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s