​(ஆதலால், அழைக்கின்றேனே…)

நின்னருளே வேண்டுகின்றேன்;

நெடியோனே, இரங்கிடாயோ?

என் இருள், விலக்கி நீயும்−

எம்பிரானே, இயங்கிடாயோ?
உறவென்று உன்னைக் கொள்ள

உத்தமனே, தவறி விட்டேன்; நின்−

கரம் எனும் ஓடம் ஏறி,

கரை சேர மறுத்தும் விட்டேன்!
இடர் என்று வரும் போதெல்லாம்,

இறை உன்னைத் தேடுகின்றேன்;

தொடரும் என் வல் வினை நீக்க−

துணை வரவும் கோருகின்றேன்!
ஆவியுள் உன்னை இட்டு,

அன்பினால் தொழ மறந்தேன்;

பாவியேன் பிழைகளுக்கெல்லாம், 

பெம்மானே காரணம் என்றேன்;
நாவினால், நாமம் சொல்ல, 

நொடியும், நான் நயந்தேன் இல்லை;

ஆவியும் நீங்கும் வேளை,

ஆள, நான் அழைக்கின்றேனே!
மனம் எனும் மேடையில்  நாட்ட−

மறந்து நான், திரிந்திருந்தேனே;

சினம் ஏதும் கொள்ளாமல் நீ,

சிறியேனைக் காத்திடாயோ?
ஏழை பால் கருணை செய்ய, 

எம்பிரான் நீ, மறுத்தே  விட்டால், 

வாழ ஓர் வழியுமின்றி−

வாடி நான் வீழ்ந்திடுவேனே!
ஏதங்கள் செய்வதெல்லாம்,

எளியேன் என் இயல்வு தானே!

ஆதலால், அழைக்கின்றேனே−

அருளிட, மீள்வன், யானே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s