​(யாரேனும் ஆவேனே….)

(யாரேனும், ஆவேனா????……)
பத்து மாதம் கருவில் சுமந்து−

பத்மநாபனை பெறுவேனா?

பாங்காய் நாளும் சீராட்டி, உன்னை−

பாலிக்கும் பேறே அடைவேனா?
கட்டுச் சோறில் பங்கும் கேட்டு−

கண்ணன் எச்சிலை உண்பேனா?

கட்டிப் பிடித்து, காதலினாலே−

கன்னத்தில் முத்தம் கேட்பேனா?
உரிமையோடு உந்தன் மடியில்−

தலையும் வைத்துப் படுப்பேனா?

உடனே வந்து காத்திடு என்று−

உருகியே, நானும் அழைப்பேனா?
உள்ளம் துடித்து, உன்னிடம் நானும்−

உன் சரண் வேண்டும் என்பேனா?

உறவுகள் இல்லா எந்தன் நிலைக்கு−

ஒரு காரணம் கேட்டே நிற்பேனா?
எந்தன் கலியும் தீர்ந்திட நானும்−

உன் மேல் சினமே கொள்வேனா?

எதிரியாய் உன்னை முன்னே நிறுத்தி, 

என் பிழை, பெருக்கிக் கொள்வேனா?
ஆயிர நாமம் சொல்லித் துதித்து−

அடியேன் நற்கதி பெறுவேனா?

அணு, அணுவாக, அனுபவம் செய்து−

அடையாளம் தொலைத்துக் கரைவேனா?
ஏதென்றாகிலும், எந்தன் கண்ணா,

சம்மதம் தந்தேன், பெண் யானே;

உறவோ, பகையோ, உன்னை நானும்,

கண்ணால், காணச் செய்வாயே!
உறவாய் நினைத்தால், என்னை உந்தன் 

உயிரில் இணைத்துக் கொள்வாயே!

பகையாய் பார்த்தால், எனக்கு உந்தன்−

கழலில் புகலிடம் தருவாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s