​(கருணைக் கடலே, காத்திடு நீயே…)

உள்ளத்தைக் கோயிலாக்கி−

உன்னை நான் நாட்டவில்லை;

உன் மனம் கோணிடாமல்−

வாழ்ந்து, நான் காட்டவில்லை!
என்னை நீ பார்ப்பாயென்று−

எள்ளளவும் அச்சமில்லை;

இனி ஒரு பிழையும் செய்ய−

எனக்கேதும் மிச்சமில்லை!
உனக்காக உருகும் அன்பர்−

அடிதொழவும், நாட்டமில்லை;

உறைகின்ற உன் திருக்கோயில்−

உவந்து வரும், தேட்டமில்லை!
எனக்கான இலக்கு எதுவும்−

இதுவரை அறியவில்லை;

எங்கும் மனம் அலைவதனாலே−

என் பாதை புரியவில்லை!
வாழும் வகை காட்டிக் கொடுக்க−

வல்லவர் துணையுமில்லை;

தாழ்ச்சியின் முழு உருவமாம்−

தமியேனுக்கு, இணையுமில்லை!
எனக்காகப் பரியும் உள்ளம்,

எம்பிரான், உனக்கு உண்டே;

என்னை நீ, தாங்கிக் கொள்ள−

நமக்குள்ளே உறவும் உண்டே!
ஏதங்கள் புரிந்ததனாலே−

ஏழை மேல் சினந்திடாதே;

எனை மீட்கும் தோணி நீயே,

அதுவும் நீ மறந்திடாதே!
என் குரல், செவியும் வீழ, 

காலம், நீ, தாழ்த்திடாதே;

இனியுமே, தாமதம் செய்தால்−உன்

கருணையோ,  வாழ்ந்திடாதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s