​(நற்றுணையாவது, நாரண நாமமே…)

பெற்றவர், பாதியில் சென்றிடுவார்;

பாதியில் வந்தவர், பின் தங்கிடுவார்;

உற்றவர் எல்லாம் கழன்றிடுவார்;

உடன் வரப்போவது, உன் ஜபமே!
கற்ற கல்வியால் பயனுமில்லை;

பெற்ற செல்வத்தால் உதவியில்லை;

மற்ற வகைகளால், வழியுமில்லை;

உடன் வரப்போவது, உன் ஜபமே!
நினைப்பது நடந்திட,  வகையுமில்லை;

நிலை எனச் சொல்லிட, இங்கு ஏதுமில்லை;

நிரந்தர இடமென்று, எதுவுமில்லை!

உடன் வரப்போவது, உன் ஜபமே!
நேற்றைய பொழுதுகள், காணவில்லை;

இன்றைய பொழுது,  என் வசத்தில் இல்லை;

நாளைய பொழுதோ, நான் அறியவில்லை!

உடன் வரப் போவது, உன் ஜபமே!
உறுதுணை, எனக்கினி, உன் கரமே;

உய்யும் துறையும், உன் கழலே;

உரக்கச் சொல்லுவேன், உன் பெயரே;

உடன் வரப் போவதோ,  உன் ஜபமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s