​(நாம ஜப மஹிமை….)

“ராம, ராமா” என்று சொல்லு;

போகும் உனது பாபமெல்லாம்!

“க்ருஷ்ண, க்ருஷ்ணா” என்று சொன்னால், 

தீரும் உனது தாபமெல்லாம்!
நாளும், பொழுதும் சிந்தனையில், 

“நாரணா” என்று

நவின்றிடுவாய்!

மாளும் உனது தீவினைகள்−

மனமே, உனக்கெது, இனி பிறவி?
“விட்டல, விட்டல” என்று  சொல்ல−

கிட்ட வருவான் கண்ணனுமே;

தொட்டு உன்னைத் தூக்கிடுவான்−

எட்டப் போகும், உன் துயரே!
“ரங்கா, ரங்கா” சொல்லிடு நீ;

தங்கும் இன்பம் உனதாமே;

எங்கும், என்றும், துயரில்லை−

ரங்கன் இருக்க பயமில்லை!
நாமம் சொல்ல, நாப் பழகு;

காம, க்ரோதங்கள் விடை பெறுமே;

தூமனத்தாலே, துதி செய்வாய்−

வாமனன், தன் கழல் சிரம் வைப்பான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s