​(அபயம் தருவாய், அரவிந்தா….)

கேட்டதும், தருவேன் என்றாயே;

கேட்டும், ஏன் இன்னும் தரவில்லை?

வாட்டம் அடைந்திடும் என் மனதை, 

வைகுந்தா, ஏன் நீ உணரவில்லை?
கேட்டுத் தருவது தாய்க்கழகோ?  நான்−

கேட்டு நிற்பதும் என் தவறோ?

ஊட்டும் தாயாய், உனை வரித்தேனே;

உன் கரம் ஈவதை, எதிர் பார்த்தேனே!
பாராமுகமென்னை வருத்திடுதே;

பக்கமே வாராது, தடுத்திடுதே;

தாராதிருப்பாயோ,  உன் துணையே?

தவிக்கவும் விடுவாயோ, குணநிதியே?
பிறவியாகிய பெருங்கடலும், எனை−

பேதமை செய்ததே, என் செய்வேன்?

உறவைச் சொல்லி அழுகின்றேன்;

உத்தமா, உன் செவி வீழலையோ?
கழலிணை வீழ்ந்த கடையனுக்கு−

கனிந்தே, அருளிட ஆகாதோ?

விழலது வீழ்ந்த நீர் போன்ற−என்

வாழ்வும், வளமே காணாதோ?
 போனதெல்லாம் இனி போகட்டும்−

புனிதா, என் பிணி நீக்கி விடு;

ஆவதெல்லாம், உன் அடியிணையில், என

அடியேன் வாழ்வினை மாற்றி விடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s