​(ஒரு மழையின் தாபம்….)

நானும் வாசல் வந்தப்போ, 

நீயோ சட்டை செய்யலையே;

வானும் வெளிச்சம் போடாதா,

தானாய் மழையும் நிற்காதா−

என்றே நீயும் யோசித்தாய்!

என்னை எங்கே நேசித்தாய்?

ஏனோ, இன்று யாசித்தாய்−

என் வரவிற்காக, பூசித்தாய்!
உன் இடம் குளிர வேண்டுமென்றால், 

என் மனம் கொதிக்கக் கூடாதே!

வருவாரை, வாழ வைப்பாயாம்;

வந்த என்னை, வைதனையே!

வேண்டும் போது வருவதற்கும், 

வெறுக்கும் போது போவதற்கும்,

யானென்ன, உன் கைப் பாவை தானோ?

இதுவெல்லாம், உனக்கே நியாயம் தானோ?
அவசியம் வந்தால் கூப்பிடுவாய்;

அதுவும் தீர்ந்தால், கூப்பாடிடுவாய்;

எனக்காய், மனவாசல் திறந்து விடு; 

எடுத்து என்னை, நீயும் நிறைத்து விடு;

உதவிக்கு, நானும் வந்திடுவேன்;

உனக்கே சுகமும் தந்திடுவேன்;

உயிர்களை எல்லாம் காத்திடுவேன்;

வளங்கள் எல்லாமும் சேர்த்திடுவேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s