​(“ராம மந்த்ரவ ஜபிஸோ, ஹே மனுஜா” தமிழாக்கம்…)

ராம, ராமா என்பாய், ஓ மனிதா, 

ராம, ராமா என்பாய்!

நாமங்கள் வேறெதுவும், 

நமக்கினி தேவையில்லை;

சோமசேகரன் உமைக்கும்,

சேமமாய் சொன்னதிதுவே!

(ராம, ராமா..)

 

பாமரனும் சொல்லும் நாமம்;

பயணத்தில் உதவும் நாமம்;

பாவங்கள் தொலைக்கும் நாமம்;

பரமபதம் சேர்க்கும் நாமம்!

(ராம, ராமா…)
அனுமன் பஜிக்கும் நாமம்;

முனிவர்கள் ஜபிக்கும் நாமம்;

துன்பம் துடைக்கும் நாமம்;

தூய விபீடணனுக்கு, அரசும் அளித்த நாமம்!

(ராம, ராமா..)
ஆனந்த தீர்த்த குரு, அனுதினம் சொல்லும் நாமம்;

ஆதவகுலத்தானை, ஸ்மரிக்க வைக்கும் நாமம்;

அடியவர் துயர் களையும், அற்புத திரு நாமம்;

புரந்தர விட்டலனின் தாரக ராம நாமம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s