​(வருவாயா? உன்னைத் தருவாயா?)

கல்லாய் சமைந்தாலும், காத்திட நான் வருவேனே;

புல்லாய் பிறந்தாலும், பாலிக்க நான் வருவேனே;

எல்லாமும் எனதன்றோ! எனக்கன்றோ, உன் கவலை?

அல்லாதது ஏதுமில்லை; அத்தனையும் என் உடைமை!!
எங்கெங்கோ திரிந்தாலும், எத்தனை நாள் பிரிந்தாலும்−

என்றேனும் எனை அழைக்க, அங்கே நான் வருவேனே;

என்னுயிரின் ஒரு துளியாய்,  இங்கு நீயும் வந்ததாலே,

என்னிடமே உனை சேர்க்க,  எல்லாமும் நான் செய்வேனே!
இசைவையே கேட்கின்றேன், இயல்வதையே கேட்கின்றேன்;

இது உன்னால் கூடுமன்றோ, இன்னமும் ஏன் தயங்குகிறாய்?

திசை ஏதும் அறியாமல், ஏன் நீயும் அலைகின்றாய்?

தாயாக நான் அணைப்பேன்; தயங்காதே, வந்திடுவாய்!
பரமனாக இருந்தாலும், என் மனதிலும் குறை உண்டே;

பக்கம் நீ வாராத பெருங்குறையும், நிதம் உண்டே;

வரம் தரவே காத்திருக்கேன், வந்திடுவாய் நீ விரைவில்;

விலகிடுமே இடைவெளியும், நம்மிடையே வெகு எளிதில்!
நீ என்னை வந்தடைந்தால், என் நெஞ்சம் குளிர்ந்திடுமே;

நெடு யுகமாய் நான் காணும், கனவதுவும் பலித்திடுமே!

நினைவெல்லாம் உனதாக, நானிங்கே காத்திருக்கேன்; 

நீ வருவாய், மது வண்டாய், உனக்காகவே, பூத்திருக்கேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s