​(அக்கறையாய், அக்கரத்தால்…..)

கரமாம் தாமரையால்

கனிந்தெனை மீட்பாயோ?

கருணா சாகரனே,

கடிதாய்,  வாராயோ?
அகலிகை காத்த கரம், 

ஆனையை மீட்ட கரம்,

ஆழியால், ஆதவனை

அன்று மறைத்த கரம்;
அடியவள் மானம் காத்து,

அருளைப் பொழிந்த கரம்;

அணிலின் உடலிலே, 

ஆதுரம் செய்த கரம்;
அனுமனை அணைத்த கரம்,

அரக்கனை அழித்த கரம்;

ஆய்ச்சியர் வெண்ணை எல்லாம்,

அமுதும் செய்த கரம்;
அவுணன் வாசல் நின்று−

அன்று யாசகம் செய்த கரம்;

ஆழியின் அடியில்  சென்று, 

அகிலமும் மீட்ட கரம்;
அவலை பரிந்து உண்டு,

அல்லல் துடைத்த கரம்;

அரனின் வில் உடைத்து−

அன்னையை ஏற்ற கரம்;
ஆழியை அடைத்த கரம்;

ஆழியைக் கடைந்த கரம்;

ஆழியைக் கரமேந்தி,

அகிலமே காக்கும் கரம்!
அத்தனை காரியமும்,

அக்கரம் கொண்டு செய்தாயே;

அடியேனுக்கு அபயமுமே,

அதே கரத்தால், நீ செய்வாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s