​(உனக்கானேன், யதுநந்தா….)

கதியவன் என கழலிணை பற்றிட, 

விதி என் செயும்? வினை என் செயும்?

பதியவன் என நெஞ்சம் பற்றிட,

படும் துயர் எது? கடும் கலி எது?
துதி தினம் என,  உளம் உரைத்திட,

தொடர் பிறவி எது? படர் துன்பமெது?

மதியவன் தந்திட, மடம் அகன்றிட,

மயக்கம் எது? மாயையும் எது?
சதம் அவன் என சரண் அடைந்திட,

சஞ்சலம் எது, சங்கடம் எது?

நிதம் அவன் திரு நாமம் நவின்றிட,

நமன் பயம் எது? நரகமும் எது?
மதம் ஒழித்து, என் மனம் அமர்த்திட,

மயர்வும் எது? மறு பிறப்பெது?

இதம் அவன் என்று, இனி உணர்ந்திட, 

இருளும் எது? இடரும் எது?
அவன் அனுக்ரஹம் நானடைந்திட,

அல்லலும் எது? அச்சமும் எது?

அன்னையாய் எனை அவன் அணைத்திட,

அழிவும் எது?  அவத்தமும் எது?
சேயென எனை அவன் தாங்கிட,

சுற்றமும் எது? சொந்தமும் எது?

சொத்தென எனை அவன் கொண்டிட, 

சுவர்க்கமும் எது? நரகமும் எது?
வாவென எனை அவன் அழைக்கையில், 

வாழ்வும் எது? வரமும் எது?

தா உனை என அவன் கேட்கையில், 

தனிமை எது? இனிமை எது?
நான் கரைந்திட, அவன் ஆகிட−

நலிவும் எது? பிரிவும் எது?

அவன் ஏற்றிட, உயிர் உய்ந்திட,

ஒன்றும் எது? இரண்டும் எது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s