​(கோபியர் கொஞ்சும் ரமணா…)

கோபியர்:−
கண்ணுக்கு மை வேணுமடா,

கண்ணா, உன் கருப்பை கடன் கொடுடா;−இந்த

பெண்ணுக்கு நீ பொருத்தமோடா? 

பார்க்கலாம், பக்கமே, வந்து நில்லடா!
வெக்கம் உனக்கெதற்கு? அது−

வஞ்சியர் எம் சீதனமே;

துக்கப் பட விடாதே−எமக்குன்

துணை தான், பெருந்தனமே!
வாலை கொஞ்சம் சுருட்டிக்கோடா−எம்

வாக்குக்கே, கட்டுப்படுடா!

மாலை இருள் வரையில், நீயும்−

மறுக்காது, இங்கே நின்றிடடா!
மாலையும், கையுமாக, நானிங்கே−

மயங்கி நிற்பதெல்லாம், உன்−

மனம் தான் உணராதோ? என்−

மாதவா, அது சொல்லியும் புரியாதோ?
அன்னை அறியாமல், உனக்கு−

ஆபரணம் கொண்டு வந்தேன்;

அதுவும், வேணுமென்றால், எனக்குன்−

அதரச் சுவை கொடடா!
வெண்ணையைக் கையில் வைத்து−

உனக்காய், நான் உருகி நிற்பதெல்லாம்,

உனக்குத் தான் தெரியுமன்றோ? அதுவும்−

ஊரார் அறிதல் நன்றோ?
சிறிய இடை அதற்கு, நான்−

சிவந்த பட்டிடுவேன்;

சிரித்து, அதை நீ உடுத்தி, என்னை−

சிவக்கவும், வைப்பாயோடா?
ஆடியில், உன் அழகை, நானும்−

அருகமர்ந்து காட்டிடுவேன்;

அதற்கொரு பரிசாக, நீ எனை−

அணைத்தின்பம் தருவாயோடா?
கண்ணண்:−
பத்துப் பதினாறு பேர் என்னை−

பிய்த்து பிடுங்குவதேன்?

ஒத்தனாய் நானிருக்கேன், இங்கு என்−

உதவிக்கு யார் இருக்கா?
பித்துப் பிடிக்க வைத்து, என்னை−

பேசவும் விடாததும் ஏன்?

மொத்தமாய் எனைக் கொடுத்தேன், இனியும்−

மனம் போலே, மகிழ்வோமே, நாம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s