​(2)  (கோபியர் கொஞ்சும் ரமணா…)

மாட்டுக்குத் தண்ணி வைத்து, பின்னே−

மதியம், வருவதாகச் சொன்னேன்;

மாமியும் சம்மதித்தாள், நான் உன் மேல்

மயங்கியே,  இங்கு வந்தேன்!
ஆரும் அறியாமல் நானும்−உனக்கொரு

அப்பம் கொண்டு வந்தேன்;

அமுது செய்த பின் நீயும்−

அதில், ஒரு எச்சில் துண்டு தருவாய்!
நாவல் பழம் முடிந்து, தலைப்பில்−

நாலாறு எடுத்து வந்தேன்;

நயனம் மூடி ரசித்து−அதையும்−

நயந்தே, நீ உண்பாயடா!
சந்தைக்குப் போவதாக, அவரும்−

சற்று முன்னே சென்றார்;  நானும்−

சட்டென்று ஓடி வந்தேன்;  இனி நாம்,

சங்கடமின்றி சுகிப்போம்!
வெண்ணை கலயத்தொடு, நானும்

விளாம்பழம் கொண்டு வந்தேன்;

உண்ண, தெரியுமோடா? இல்லையெனில்−

ஊட்டி விட வரவா?
நிலவும் சாய்ந்த பின்னே, நல்ல−

நடுநிசி வேளையிலே−

நீலக்கண்ணா, வாடா, வந்தெமது−

நெஞ்சில் இன்பம் தாடா!
அருந்தவம் செய்வார் எல்லாம்−ஒரு

அசூயை கொண்டிடவே, நீ−

ஆடிப் பாடி இருடா−எமது

அணைப்பில் மயங்கி நில்லடா!
பிரமனும், ருத்திரரும்−எம் மேல்

பொறாமை கொண்டிடவே−நீ

பதுங்கி, எம்மிடம் இருடா; உனை−

பாலிப்போம், இனி,  கவலை நீயும் விடடா !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s