​(காதலால், பேதமை செய்தாயே…)

உன் காதல் தீ என்னை எரிக்குதடி−அதன்

உஷ்ணம் தணியவே, இங்கு உவந்து வந்தேன்;

பின்னும் ஏனோ உன் முகம் காட்டி−எனைப்

பாடாய் படுத்தினால், நானும் என் செய்வேன்?
கண் இணை அம்புகள் செய்து வைத்த−என்

காயங்கள் ஆறிட, ஒரு வழியுமுண்டோ? உன்−

காதலை, மருந்தாய் பூசி விட, அது−

காணாமலே, உடன் போகுமன்றோ?
பெண்மையின் மென்மையை நானறிய−உன்

பார்வையில், கனிவைக் கூட்டிடடி;

உன் மனம் நிறைந்தவன் நானென்றே−இந்த

ஊரார் அறியவே, பறை சாற்றிடடி!
விண்ணின் நிலவை சாட்சி வைத்து−

என்னை, உன்னவனாய், வரித்திடடி;

கண்ணின் மணியாய், உனை கோர்த்து வைக்க−

கன்னியே, எனக்கொரு வரம் கொடடி!
உன் மனம் அறியாத ரகசியமோ? உன் மேல்−

உன்மத்தம் ஆனதும் ஓர் அதிசயமோ?

என்னவளே, இது விதி வசமோ?

உன் விழி வீச்சிலும், என்ன, துளி விஷமோ?
ஆறாத காதலால், நிலை குலைந்தேன்;

அணைத்தே சுகம் தா, உயிர் நிலைப்பேன்;

பாராத முகமெல்லாம் தாங்காதே; நீ

பக்கல் இல்லாமல், விழி தூங்காதே!
தனியனாய் நிற்கிறேன், தளிர் கரம் தா;

தனிமையின் தடயங்கள் அழித்திட வா;

இனிமையை இதயத்தில் நிறைத்திட வா;

இல்லை எனாமல், சுகம் அளித்திட வா!
எனக்கான அடையாளம், கரைத்து விடு;

என்னுள்ளே, உன்னை நீ  இணைத்து விடு;

நமக்கான நல் வாழ்வோ, உன் இசைவில்;

நாரணன் காத்திருக்கேன், உன் கண் அசைய!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s