​(3) − கோபியர் கொஞ்சும் ரமணா….

என் நினைவெல்லாம் உன்னைச் சுற்ற−

என்ன நீ மாயம் செய்தாய்?

என் கனவிலும் உன்னைக் காண, 

என்ன நீ கள்ளம் செய்தாய்?
உதடுகள் உச்சரிக்கும்−

உன் பெயரும் ஏன் அலுப்பதில்லை?

உன்னுடன் இணைய விழையும், இந்த−

உறுதி ஏன் குறைவதில்லை?
இரவெல்லாம், உறங்க மறுக்கும்−

இந்த விழிகள் ஏன், என் வசமில்லை?

உறவாக, உன்னை விழையும், இந்த−

உள்ளம் ஏன், நிலை உணரவில்லை?
திருமணம் கொள்ளும் ஆசை−

துளியும், என் நெஞ்சில் இல்லை;

ஒரு மனம், அதுவும் ஏனோ, 

உன்னை விடுத்து, மீளவில்லை!
பெற்றவர் சொல்வதெல்லாம்−

பேதை செவி, வீழவில்லை;

மற்றவர் ஏச்சும், பேச்சும்−

மங்கையை வருத்தவில்லை!
உற்றவனாய், உன்னைக் கொண்டேன்;

ஒருவரும் எனக்கு,  பொருட்டு இல்லை;

மற்றெதுவும், மறுக்கும் பெண்மை−

மாறவும், ஒரு வாய்ப்புமில்லை!
கட்டமே காதலென்று, இந்த−

கன்னியும் விலகுவதில்லை;

கண்ணனைத் தன்னவனாக்கும், என்−

காதலுக்குத் தோல்வியுமில்லை;
என்னை நீ ஏற்றுக் கொள்ள−

ஈருடல், என்றுமில்லை; எனை−

தன்னுடன் சேர்த்துக் கொள்ள−என்

தவிப்புக்கு இனி வேலையில்லை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s