​(பேதமை, கொல்வாயடி….)

ராதை:−
உன் கரங்களில் தவழும் குழல்−

நானாக வேண்டும்;

உன் அதரம் இசைக்கும், இசையும்−

எனக்காக வேண்டும்;
உன் இரு விழி காணும் பொருள் 

நானாக வேண்டும்;

உன் கருத்த மார்பரங்கம்−

எனதாக வேண்டும்;
உன் தோள் சாயும் தோகையும்

நானாக வேண்டும்;

உன் தோழமையில், எனதாவி, 

காலம் மறக்க வேண்டும்;
உனக்கான உன் உலகம், 

என்னில் காண வேண்டும்;

உருகும் நொடியெல்லோம்−

என்னைச் சேர வேண்டும்!!
கண்ணன்:−
எனக்கான மறுபாதி, 

நீ தானே பெண்ணே!

எதற்காக மனக்கலக்கம், 

சொல்வாயோ, கண்ணே!
உனக்கான, உன் இடமே−

கொள்வாரும் உண்டோ?

உணராது போனாலே,

வீண் வருத்தம் அன்றோ?
தனக்கென்று ஏதொன்றும்,

தமியேன் வசம் இல்லை; 

தந்தேனே, எனதெல்லாம்−

தன் பாதிக்கென்று!
உனக்கேனோ,ஒரு ஐயம்−

இனியுமே,  மானே?

உன் உறவில்லை என்றாலே−இந்த

வைகுந்தன், வீணே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s