​(காணும் உருவெல்லாம்….)

கண்ணனைக் கண்டேனடி; 

காணுமிடமெங்கும், 

வேங்குழலோடு, என்−

கண்ணனைக் கண்டேனடி!
வேலொடு நின்றிருக்கும்,

வேலவனைக் கண்டாலும்,

மாலவன் அவன் முகமே−

மலர்ந்து தெரியுதடி!

 

அரமே சிரமணிந்த, 

அரனைக் கண்டாலும், 

அருளைப் பொழியுமந்த−

அச்சுதனாய் தெரியுதடி!
அரிஅர, புத்திரனாய்,

அகிலம் போற்றுமந்த−

அய்யப்பன் உருவினிலும்,

அரங்கனே, தெரியுதடி!
ஆலயம் என் மனதே;

அங்கெழுந்தருள்வானே;

அன்பெனும் மலர் தூவ, 

அதையுமே, ஏற்பானே!
அனைத்துயிர் அவன் ஆனான்;

அனைவர்க்கும் தாய் ஆனான்;

அயனோ, அரி, அரனோ, 

அனைத்தும் அவன் உரு தானே!
மனத்தினில் மாசகற்றி, 

மனமுவந்தவனை  நாட்டி,

மனம், மொழி, மெய் ஒன்ற,

தொழவுமே, வருவானே!
எவ்வுரு கொண்டவனை−

ஏத்தியே நின்றாலும்,

அவ்வுருவுள் உறைந்து, 

அடியேனைக் காப்பானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s