​(பதமலரில் புனைவாய், பரந்தாமா….)

க்ருஷ்ணா, கோவிந்தா, ஜனார்த்தனா,

க்ருபை உண்டோ, என் மீது, மன மோஹனா?

வ்யர்த்தம் போனதே, என் ஜீவனே−

வைகுந்தம் தருவாயோ, என் தேவனே?
நாமம் சொன்னதில்லை வாழ்நாளிலே−

நாதா, உனை நயந்ததில்லை, ஒரு போதிலே!

“நானும்” கரையவில்லை என் நெஞ்சிலே−

நாரணா, கனிவாயோ, என் மீதிலே?
சதமென நினைத்தேன் இந்த சொந்தமே;

சங்கடம் தந்ததே, என் பந்தமே;

சகலமும் நீயென, மனம் கொள்ளவே−

சஞ்சலம் அகலோதோ, என் தெய்வமே?
ஆவியுள் நிறைந்திட, நீ வருவையோ?

அன்புடன் அனுக்ரஹமும், தருவையோ?

பாவியேன் பற்றறுக்க  நீயுமே−

பழவினை எனை நீங்கி ஓயுமே!
சேயேன் குரல் உனக்கு கேட்குமோ?

சேமமும் எனை வந்து சேருமோ?

தாயின் அரவணைப்பும் கிடைக்குமோ?

தமியேனுக்குன் மடியும் நிலைக்குமோ?
வா, வா, வைகுந்தா, அருகில் வா;

தா, தா, எனக்குந்தன் திவமும் தா;

ராதா ரமணா, நீ எனையுமே−உன்

பாதக் கமலமே, புனைவையே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s