“நவ வித பக்தி” 

(ஸ்ரவணம்)

தவிக்கும் பிறவிச் சக்கரத்தில், 

புவியில் வீழ்ந்தேன் பலகாலம்;

செவியில் உந்தன் திருநாமம்−

சீர் அணியாய் கொள்ளுவேன், இனியேனும்!
(கீர்த்தனம்)

நாவால் உன்னைப் பாடிடுவேன்;

நலிவுகள் எல்லாம் தொலைத்திடுவேன்;

நாயேன் ஜென்மமும் கடைத்தேற,

நயந்தே, நிதம் உனை ஏத்திடுவேன்!
(ஸ்மரணம்)

நினைவினில் உன்னை நிறுத்திடுவேன்;

நிமலனை என்னில் நிறைத்திடுவேன்;

நாளும், பொழுதும் நொடிகளுமாய்−

நெஞ்சினில், உன்னை உணர்ந்திடுவேன்!
(பாதஸேவனம்)

இடர் எனும் கடலைக் கடந்திடவே,

இணையடியில் எனைத் தந்திடுவேன்;

இதயத்தை உனக்காய் ஆக்கி வைத்து, 

என்றும், கழலடி கிடந்திடுவேன்!
(அர்ச்சனம்)

ஆயிர நாமங்கள் தினம் சொல்லி, 

அடியேன், உன்னைத் துதித்திடுவேன்;

அன்றே அலரும் மலர் கொண்டு, 

அன்பால், உன்னைத் தொழுதிடுவேன்!
(வந்தனம்)

அல்லும், பகலும், அடியேனும்,

அணுவிலும் உன்னை உணர்ந்திருந்தே−

அடைக்கலம் வேண்டி வரித்திடுவேன்;

அபயம் தாவென வணங்கிடுவேன்;
(தாஸ்யம்)

அடிமையாய், உனக்கெனை ஆட்படுத்தி,

அகமே மகிழ பணி செய்வேன்;

அடியவன் செய்கின்ற பணிகளிலே, 

ஆண்டவன் உன்னையும் கண்டிடுவேன்! 
(ஸக்யம்)

தாழ்ச்சியைச் சொல்லி அகலாது, 

தோழமை, உன்னுடன் கொண்டிடுவேன்;

ஆழமான உன் அன்புணர, அதுவே−

வழியாய் அறிந்திடுவேன்!
(ஆத்ம நிவேதனம்)

தன்னதெல்லாம், தொலைத்து விட்டு, 

உன்னில் நானும் கரைந்திடுவேன்;

தானும், தனதும் மாய்ந்த பின்னே−

யாதும் நீயெனத் தெளிந்திடுவேன்!
ஏதொரு வகையிலோ உனை அடைய−

ஏழையும் தேடுவேன், ஒரு மார்க்கம்;

தீதோ, நன்றோ, பாராமல், 

தேவனே, தருவாய் வைகுந்தம்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s