​(செய்த பாவம் தீருமோ?….)

ஆயர்பாடி அலைந்தாயோ−

அழகு பாதம் நொந்திடவே?

தாயை முகவரி கேட்டாயோ?

தன்னைத் தந்திட வந்தாயோ?
கோகுலமெங்கும் நடந்தாயோ,

கோதையின் உள்ளம் சொல்லிடவே?

வியாகுலம் உன்னைத் துரத்தியதோ−

வேங்குழல் இசையும் நாடியதோ?
விருந்தாவனமெங்கும் திரிந்தாயோ−

விசனம் ஒழிக்க விழைந்தாயோ?

சிந்தாமணியே, செண்பகமே,

சிந்தையில் சுமந்தே, கரைந்தாயோ?
இரவும், பகலும் இத்திருவடியால்

எனக்காய், ஏங்கித் தேய்ந்தாயோ?

உறவும் கொண்டிடும் ஆசையிலே−

வலியால், இவற்றை வதைத்தாயோ?
முந்தைய காலம் என் பாதுகைக்கு−

பிந்திப் பிறந்தவன், சிரம் தந்தான்;

ஏந்தி, அடியேனும் இக்கழல்களுக்கு,

பாந்தமாய்  சிரம் இன்று தந்திடவா?
மாது உந்தன் மனம் வருந்த−

மாதவன் புரிந்த இப்பிழைகள்,

ஏது செய்தால், சரியாகும்?

ஏந்திழையாளே, சொல் போதும்!
அடியிணைக்கு செய்த அபசாரம், 

அடியேனை வருத்துதே பல காலம்;

அதற்கும் ஏதடி பரிகாரம்?

அதை நீ சொல்லடி இந்நேரம்!
என்னால் பட்ட துயரெல்லாம்−

என்றோ தீரும்,

இத்திருவடிக்கே?

தன்னால் பெருகிடும் கண்ணீரால், 

தாளிணை கழுவுவேன்;

அது நல் விடிவோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s