​(பழமொன்று தருவாயா?…)

பல நாளாய் காத்திருக்கேன்;

பாதையையே, பாத்திருக்கேன்;

பழமொன்று  தருவாயா? அதை−

பரிவுடன் தருவாயா?
வாழ்க்கைப் பயணத்திலே−

வழித் துணை நான் வருவேன்;

வைகுந்தன் மனம் குளிர−ஒரு

வாழைப்பழம், தருவாயா?
பக்கம் நானிருந்து, உனக்கு,

பல காரியமும் செய்வேன்;

பரிசாய், நீ எனக்கு−ஒரு

பலாப்பழம் தருவாயா?
மங்கலம் பெருகிடவே−உன்

மாளிகை காத்திடுவேன்;

மதியம் புசித்திடவே−ஒரு

மாங்கனி தருவாயா?
தினமும் உதவிடுவேன்;

தருணத்தில் ஒத்துழைப்பேன்;

தக்கது செய்பவனுக்கு−

திராட்சையும் தருவாயா?
நாளெல்லாம் உழைத்திடுவேன்;

நலமே கூட்டிடுவேன்;

நன்றியால் நீ எனக்கு,

நாவல்பழமே தருவாயா?
பிழைகளை மறந்திடுவேன்;

ப்ரியமே செய்திடுவேன்;

பாசத்தால், நீ எனக்கு−

புளிப்பழம் தருவாயா?
இன்னல்கள் களைந்திடுவேன்;

இனி உனக்காய் இருப்பேன்;

இதயம் கனிந்து நீயும்,

இலந்தைப் பழம் தருவாயா?
எந்தப் பழம் தந்தாலுமே,

எனக்கென்று அன்புடனே,

எடுத்து நீயும் தருவாயா?

என் மனமே நிறைப்பாயா?
நீ தரும் பழமதுவும், 

நிசமாய் தித்திக்க, 

நல்லன்பை கலந்ததிலே, 

நாரணனுக்கு ஈவாயா?
நானும், 

பல நாளாய் காத்திருக்கேன்; உன்

பாதையையே பாத்திருக்கேன்; நீ

பரிவுடன் தரும் பழமே, இந்த

பரந்தாமனுக்கொரு வரமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s