(எல்லாம், கடந்து போனாலும்…..)

தாயின் கருவறை கடந்து வந்தேன்;

தாங்கும், அவள் மடி கடந்து வந்தேன்;

சேயெனும் நிலைகளைத் தாண்டியுமே−

வாலிப வாசலை வந்தடைந்தேன்!
யானும், எதுவும் உணரும் முன்னே,

இளமை வளமை கடந்து வந்தேன்;

எனக்கென இருந்த சுற்றங்களும், 

என்னை ஒதுக்க, மயங்கி நின்றேன்!
வேர்த்தும், உழைத்தும், சேர்த்த செல்வம்−

வேறொரு இடமும் சென்றதேனோ?

பார்த்துப் பார்த்து பாலித்த−என்

பந்தங்கள், என்னைத் துறந்ததேனோ?
நோயும், முதுமையும் ஆட்டி வைக்க−

நாயேன், வந்துன் வாசல் நின்றேன்;

கடந்தவை ஏதும், எனதில்லை;

நினைத்து, அதை வருந்தவோ, நேரமில்லை!
கடந்து வந்த பாதையிலே, 

கண்ணா, உனைக் காண, வாய்க்கவில்லை;

இடந்தென்னை, நீயும் ஒதுக்கி விட்டால்,

இருக்கும் இடமே, எனக்கு எங்கே?
எல்லாம் கடந்து போனாலும், நீ−

எனக்குண்டென, நினைத்து வந்தேன்;

என்னைக் கடந்து, நீ போகாதே−

என் கண்ணா, இந்த வெவ்வுயிர், அதையே

தாங்காதே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s