​(அடங்காத பேரழகே….)

ஈதென்ன பேரழகு? என்−

இதயம், கொள்ளை போனதே!

இதை வாயார சொல்லிடவே, 

என் வார்த்தை பஞ்சம் ஆனதே!
தாமரைக்கு ஒப்பிடவே, 

தயக்கம் மிக ஆகுதே;

தரணியிலே, அதன் வாழ்வு,

தாங்கி நிலைப்பதில்லையே!
வெண்மதிக்கு ஒப்பிடவும், 

என் மதியோ மறுக்கிறதே;

வளர்ந்த பின் தேய்வதெல்லாம், இவன்−

வரலாற்றில் இல்லையே!
தங்கத்திற்கு ஒப்பிடவோ, 

தடை கொஞ்சம் இருக்கிறதே;,

தரம் மாறா தங்கமிது−

தனக்கு, உவமையில்லையே!
முத்தென்று சொல்லுவதா,

முகிழ் மலராய் சொல்லுவதா?

தித்திக்கும் அமுதூறும்−

திரவியமெனக், கொள்ளுவதா?
ஏதென்று உரைத்திட்டால்,

இவன் அழகிற்கு ஈடாகும்?

தோதாகும் சொல் ஒன்று−

என்றினியும் உண்டாகும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s