​(மஞ்சனமாட வா, மாதவா…)

அமலன் நீயும் ஆனதனால்,

அவசியம் இல்லை நீராட;

அன்னையாய் எனக்கொரு ஆசையடா−

அதற்கே, நீயும் இடம் கொடடா!
நாக்கு வழிக்கும் நளினத்திலே,

நானிலம் உண்ட “நா” ரசிப்பேன்;

காக்கும் கரங்களை நீவி விட்டு,

கிடைத்த பேற்றுக்கு உவந்திருப்பேன்!
எண்ணையை சிரமே வழியவிட்டு,

உன் இரு காதுக்கும் திரி இடுவேன்;

கன்னங்கரிய குழலதுவை−

கைவிரலாலே சொரிந்திடுவேன்;
உலகலந்த அந்த திருவடியை,

உருவி, உருவி, விட்டிடுவேன்;

ஒட்டிக் கொண்டு உறவாடும்,

உன் பத்து விரல்களை சொடுக்கிடுவேன்;
பதமாய் தண்ணீர் கொதிக்க வைத்து−

பக்குவமாக விட்டிடுவேன்;

இதமாய், இரு புறம் தேய்த்து விட்டு−

இளஞ்சூட்டில், நீர் காட்டிடுவேன்!
அகிலொடு சந்தனம் நறும் புகையும், 

அளவாய் உனக்கென ஆக்கிடுவேன்;

துகிலால், உன்னைத் துடைத்து விட்டு, 

தூய உடைகளால், அலங்கரிப்பேன்;
என்னை நம்பு, என் குட்டா,

இதிலொரு சங்கடம் நேராது;

மண்ணைப் பூசிய உன் மேனி,

மணத்துப் போகும், தவறாது!
சோதையின் மகனாய் வந்ததனால்−

சோதனை, இதுவென நினையாது−

பாரும், விண்ணும் பார்த்திருக்க−என்

பேருமே விளங்க நீ நீராடு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s