​(மீட்க வா, மாதவா….)

யதுகுல திலகா, 

யசோத பாலா,

கதி இனி நீயே, 

காத்தருள்வாயே!
துதிகளும் அறியேன், 

தூமனமறியேன்;

விதி வழி சென்று, 

வீணனும் ஆனேன்!
நாரணன் உன்னை

நயந்ததுமில்லை;

காரணன் நீ என,

காணவுமில்லை!
தான தருமங்கள் 

செய்ததுமில்லை;

“நான், எனதெல்லாம்”

நீக்கவுமில்லை!
உன்னடி போற்றும்,

உத்தமர் துணையும்,

எனக்கென இதுவரை

ஏற்றதுமில்லை!
ஏதங்கள் எனதோ, 

எண்ணில் அடங்கா;

பாதங்கள் உனதோ,

பாவியுள் பொருந்தா!
நாதன் நீயே,

நயந்தொரு வழி சொல்;

ஏதலன், ஏழையேன்,

எனக்கொரு விதி செய்!
கதறிடும் என் குரல்−

கண்ணா, கேட்குமா?

பதறியே, பரிந்தே,

பேதையை, மீட்க வா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s