​(கழலிணை தந்தேன்…)

அலுத்து விட்டதா,

அவனியில் வாழ்க்கை?

அங்கலாய்க்காதே−

அடியிணை தந்தேன்!
அடைக்கலம் இங்கே;

அன்புள்ளம் இங்கே;

ஆறுதல் தேடி, நீ

அலைவதும் எங்கே?
மறவாது இந்த

மலரடி வீழ்ந்தால்−

உறவாய் நானும், 

உனக்காய் இருப்பேன்!
சதமென எதுவும்

சகத்தினில் இல்லை;

பதமலர் இதை விட

பெருந்துணை இல்லை!
கனவாம் வாழ்வில்,

கழியும் பொழுதில்−

நினைவாய் நீளடி,

நெஞ்சினில் உழுவாய்!
காட்டிக் கொடுத்தே,

காத்திட வந்தேன்;

பூட்டியே வைப்பாய், என்−

பொன்னடி உள்ளில்!
பிறவிப் பிணியின்

பிடியில்,  நீ ஏனோ?

இறவா வரம் தரும்

இணையடி வீணோ?
வருவாய், பெறுவாய்,

வரம் இது, தெளிவாய்!

கருணையின் உரு−இக்

கழலடி வீழ்வாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s