​சரி, இனி ஏதும் நான் பேசவில்லை….

எரிக்கும் என் வினை நீக்கு;

ஏதங்கள் எல்லாம் போக்கு;

என் பிறவிப் பிணி அகற்றி,

என்னை உனக்கென்றாக்கு!
சரி, இனி ஏதும் நான் பேசவில்லை!
கருவறையில் எனை அடைத்து,

கலங்க, இனி வைக்காதே;

மறு முறையும், மனம் வருந்த, 

மண்ணில் என்னைத் தள்ளாதே!
சரி, இனி ஏதும் நான் பேசவில்லை!
நாமங்கள் யானறியேன்;

நல்லடியார் யானறியேன்;

நன்னெறிகள் யானறியேன்;

நாரணணும் நானறியேன்;
சரி, இனி ஏதும் நான் பேசவில்லை!
வந்து நின்றேன் உன் வாசல்;

வழக்கெல்லாம் ஒழித்து விடு;

வல்வினையேன் கலி யாவும்,

வைகுந்தா, மாய்த்துவிடு!
சரி, இனி ஏதும் நான் பேசவில்லை!
கைத்தலத்தில் எனைத் தாங்கி,

கருணையுடன், அள்ளி எடு;

கழலிணையில் இளைப்பாற,

கண்ணா, நீ சொல்லிக் கொடு!
சரி, இனி ஏதும் நான் பேசவில்லை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s