​(காதலெனும் கயிறெடுத்து…..)

கட்டிப் போட்டதேனோ, இக்−

கட்டை அவிழ்த்திடடா;

கட்டி அணைத்தென்னை−என்

காதலை அறிந்திடடா!
சுட்ட வடுவெல்லாம், நானும்

சொல்லிக் காட்ட வேண்டாமா?

விட்டலா, உளம் விண்டுரைக்க−நீயும்

வர வேண்டாமா?
கட்டமாய் கழிந்த காலம்−உனக்கு,

காட்டிக் கொடுக்க வேண்டாமா?

இட்டமாய், நீ ஆட்டி வைத்ததையும்−

இயம்பிக் காட்ட வேண்டாமா? 
பட்டதெல்லாம் இனியேனும், 

பழங்கதையாய் போயிடுமா?

இட்டமாய், என் தெய்வமும்−

எதிரில் வந்து தோன்றிடுமா?
எட்ட இருந்தென்னை−

ஏக்கத்தில் வைப்பதேனோ?

தொட்டு இழுத்தென்னை−உன்

தோள் சேர்த்தால் ஆகாதோ?
வட்டக்கரு விழியால்−எனை

வருடி விடும் நாளெதுவோ?

கிட்ட வந்தென்னை, உன்−

கரச்சிறையுள் அடைப்பதென்றோ?
கேட்ட பின்னேனும், எந்தன்−

குறையெல்லாம், தீர்ப்பாயோ?

வாட்டமெல்லாம் ஒழித்தென்னை−

வாழவே நீ வைப்பாயோ?
இக்கட்டிலிருந்தென்னை, எக்−

கணமே, நீ மீட்பாயோ? 

அக்கட்டாய் உன் அரவணைப்பு,

அடியேனுக்கு, என்றும் வேணுமடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s