(வேங்குழலும் வேண்டாமே…)

கண் மூடி புல்லாங்குழல், நீ ஊதும் அழகு−

காணக் கண்களும், கோடி தான் வேணும்;

கருவண்டுக் கண்களை, நீ திறக்கும் முன்னே−உன்னைக்

கட்டிப் போட்டு, கைது செய்ய, நான் அருகே வந்தேன்;
என் இது? யார் சொன்னார், நான் வந்தேன் என்று?

உன் பொல்லாத கண் திறந்து, 

பார்த்தாயே என்னை!

கள்ளூறும் கண் வீச்சில், நான் கரைந்தே தான் போனேன்; 

உள்ளூறும் உன்மத்தம் எனை ஆள வீழ்ந்தேன்!
வேங்குழலாய், எனை மீட்ட, உள்ளம் நான் தவித்தேன்;

பூங்கொத்தாய், எனை மறந்து, உன் மார்வமே சாய்ந்தேன்;

ஆங்கதனை எதிர்பார்த்து காத்திருந்த நீயும்−எனைத்

தாங்கியே, தீர்த்திட்டாய், உன் தாபத்தீயும்!
பெண்மையின் இலக்கணங்கள் பேதை நான் மறந்தேன்;

என் மனத்தீயிலே, மெழுகாகி எரிந்தேன்;

இனியும் நீ இதழாலே, தீண்டாதே, குழலை; என்−

இதயம் அதைத் தாங்காதே; எனக்காக்கு, அவ்வமுதை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s