​(உள்ள(த்)தை உணர, இவ்விளையாட்டோ?….)

ராதை:−
சோதை மகனைத் தோற்கடிக்க,

சாதகமாய் ஓர் ஆயுதமே−

பேதை நானும் வைத்திருக்கேன்;

பார்க்கலாமா, பரந்தாமா?
கண்ணன்:−
என்னை வெல்லும் ஓர் ஆயுதமே−

உன்னிடம் இருப்பதும் அதிசயமா?

அந்த கண் இணை வீச்சொன்று போதுமேடி;

இந்த கண்ணன், கைதியும் ஆவானேடி!
ராதை:−
சாலமெல்லாம் உன் பேச்சினிலோர்−

சங்கதி என்று நானறிவேன்;.

காலமெல்லாம், அதைக் கேட்டதனால்−

கன்னி மனம், உனை நம்பாதேடா!
கண்ணன்:−
நம்ப மறுத்தால், நான் என் செய்வேன்?

நங்கைக்கு, என் மனம், என்றுணர வைப்பேன்?

நந்தன் மகனுக்கேன் இந்த சோதனையோ?

நான் வெகுளியும் ஆனதால் வந்த வேதனையோ?
ராதை:−
உன்னை வெகுளியாய், இங்கு ஆர் ஏற்பார்?

உண்மை உணர்ந்தோரும், எங்கனம் பொறுப்பார்?

கண்களை நம்பலாம், தவறில்லை;

கண்ணா, உனையோ உளம்,  நம்பாதே!
கண்ணன்:−
என் கலி தானடி, ஈதெல்லாம்−

என்னவளே, இந்த ஐயமெல்லாம்;

இன்னமும் மனம் உன்னை நாடுவதேன்?

இந்த மாயத்தில்,  உளமும் வாடுவதேன்?
ராதை:−
போகட்டும், கண்ணா, விட்டிடு நீ;

பேதை என் வார்த்தைகள் மறந்திடு நீ;

ஆயுதம் என்பதும், என் அன்பே; என்−

ஆயனே! அகப்படு அதிலே;  இல்லை, வம்பே! 
கண்ணன்:−
அன்புக்கு நானென்றும் அடிமையடி;

அதை ராதையின் உள்ளமும் அறியுமேடி;

உன் அன்பில் கைதியும் ஆனதினால், 

இன்று வரையில், நான் தோற்கின்றேன்!
எனக்கொரு வருத்தம், இதில் என்றுமில்லை;

இது அடியேன் பாக்கியம், மறுக்கவில்லை;

உன் கண் இணையால் என்னை கட்டியதால், 

என் நாமமும், “கண்ணனாய்” ஏற்றனே நான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s